முதல்வர் ஸ்டாலின் 70..சென்னையில் வாடிவாசல்..மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு..துள்ளி வரப்போகும் காளைகள்
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களமிறங்க உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தடைக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான். பல நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக தமிழ் மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
Source: https://tamil.oneindia.com/